Home உலகம் ‘லித்தியம்’ பேட்டரிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – விமான நிறுவனங்களுக்கு போயிங் எச்சரிக்கை! 

‘லித்தியம்’ பேட்டரிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – விமான நிறுவனங்களுக்கு போயிங் எச்சரிக்கை! 

566
0
SHARE
Ad

lithiyamகோலாலம்பூர், ஜூலை 18 – போயிங் நிறுவனம், தனது விமானங்களை பயன்படுத்தும் ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடம் ‘லித்தியம் ஐயான் பேட்டரிகளை’ (lithium-ion batteries) அதிக அளவில் விமானங்களில் எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய பேட்டரிகள் எளிதில் தீப்பற்ற கூடியதால், அவை பேராபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் உள்ள ஏர்லைன்ஸ்களுக்கு நாங்கள் அனுப்பி உள்ள வழிகாட்டல் அறிவிப்புகளில், பெரும்பாலும் லித்தியம் பேட்டரிகளை கார்கோக்களில் எடுத்துச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளோம். இவை எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால் இவற்றை அதிக அளவில் எடுத்துச் செல்வது ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

இத்தைகைய பேட்டரிகள் சார்ட்-சர்க்கியூட்டானால் அதிக அளவில் ஹைட்ரஜனை வெளியிடும் தன்மை கொண்டவை. இதன் மூலம் தீப்பற்ற வாய்ப்புள்ளதாக கடந்த வருடம் சோதனை (படம்) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அனைத்துலக சிவில் விமான போக்குவரத்து அமைப்பும், இந்த விவகாரத்தில் சில ஒழுங்கு முறைகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவைச் சேர்ந்த கூட்டரசு விமானப் போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கடந்த 1991-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியில் இருந்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி வரையில், லித்தியம் பேட்டரிகளை கொண்டு சென்றதால் 141 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது. எம்எச் 370 விமானம் மாயமான சம்பவத்திலும், லித்தியம் பேட்டரிகளால் அசம்பாவிதம் நடந்து இருக்கலாம் என்ற ஐயப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.