Home நாடு தஞ்சோங் காராங் படகு விபத்து: ரவிசங்கரின் சடலம் மீட்கப்பட்டதை அறிந்த நண்பர்கள் கடும் துயரம்!

தஞ்சோங் காராங் படகு விபத்து: ரவிசங்கரின் சடலம் மீட்கப்பட்டதை அறிந்த நண்பர்கள் கடும் துயரம்!

516
0
SHARE
Ad

51437300031_BOTKARAMகோலாலம்பூர், ஜூலை 20 – கடந்த வியாழக்கிழமை தஞ்சோங் காராங் கடலில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நீரில் மூழ்கி மரணமுற்றனர்.

அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்ட வந்த ரவிசங்கரின் (வயது 24) சடலமும் நேற்று மீட்கப்பட்டது. இதனை அறிந்த அவரது நண்பர்கள் சோகத்தில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் இரண்டு நாட்களாகத் ரவிசங்கரின் சடலம் தேடப்பட்டு வந்தது. ஆனால் ரவிசங்கர் இறந்திருக்க மாட்டார் எப்படியாவது திரும்பி வந்துவிடுவார் என அவரது நண்பர்கள் நம்பியதோடு, அவருக்காகப் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் நேற்று இறுதியாக ரவிசங்கரின் சடலமும் மீட்கப்பட்டதை அறிந்தவுடன் கடும் துயரத்தில் ஆழ்ந்த அவர்கள் பேஸ்புக்கில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

சுங்கைபூலோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிராணியாகப் பணியாற்றி வந்தவர் ஜி.ஜெயசங்கரி (வயது 27). தனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை வருணனின் ஆசியைப் பெற வேண்டி, தனது குடும்பத்தினருடன் தஞ்சோங் காராங் கடலுக்குச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

நடுக்கடலில், வழிபாடு செய்து விட்டு திரும்புகையில், பெரிய அலையொன்று வந்து படகை மோதி சேதப்படுத்தியதால், படகு நீரில் மூழ்கியுள்ளது.இதனால் படகில் இருந்த 14 பேரும் கடலில் தத்தளித்துள்ளனர்.

அப்போது கடலில் மீன் பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்த மீனவர்கள், தத்தளித்துக் கொண்டிருந்த 7 பேரைக் காப்பாற்றியுள்ளனர். இதில் சோகம் என்னவென்றால், 14 பேர் இருந்த அப்படகில் உயிர்காப்பு மிதவை இரண்டு மட்டுமே இருந்துள்ளது.

அதில் ஒன்றை எடுத்துக் கொண்ட சி.சத்தியா (வயது 25) என்பவர், நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தனது அத்தையைக் காப்பாற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனிடையே, கோயில் சிலைகளை கடலில் கரைக்கச் சென்றதாகவும், அஸ்தியைக் கரைக்கச் சென்றதாக இருவேறு தகவல்கள் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில், காவல்துறையினர் தற்போது இந்த விபத்து குறித்த முழு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.