Home உலகம் ரூ.600 கோடி செலவில் வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆய்வு: ஸ்டீபன் ஹாக்கிங்!

ரூ.600 கோடி செலவில் வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆய்வு: ஸ்டீபன் ஹாக்கிங்!

729
0
SHARE
Ad

14ரஷ்யா, ஜூலை 22- வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆய்வுக்காக சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான யூரி மில்னருடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அண்டசராசரத்தில் உள்ள வேறு கோள்களிலும் பூமியில் இருப்பதைப் போல உயிரினங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்ற பல கோள்களைக் கண்டுபிடித்த ஜெஃப்ரி மார்சி உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் பலரும் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர்.

1960-ஆம் ஆண்டில் இருந்தே பிரமாண்டமான டெலஸ்கோப் மூலமாக ரேடியோ சமிக்ஞைகளை அனுப்பி, அதன் மூலம் வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.