Home கலை உலகம் 100 கோடிக்கு மேல் வசூலித்துச் சாதனை படைத்த தமிழ்ப் படங்கள்!

100 கோடிக்கு மேல் வசூலித்துச் சாதனை படைத்த தமிழ்ப் படங்கள்!

689
0
SHARE
Ad

anushkaசென்னை, ஆகஸ்ட் 7- நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் உலகளாவிய அளவில் ஆங்கிலப் படங்களும் இந்திப் படங்களுமே 100 கோடியைத் தாண்டி வசூலை அள்ளி வந்தன. ஆனால், அண்மைக்காலமாகத் தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் படங்களையும் விஞ்சும் அளவுக்கு வசூல் சாதனை புரிந்து வருகின்றன.

அப்படி 100 கோடிக்கு மேல் வசூலித்து வியாபார ரீதியில் வெற்றி பெற்ற தமிழ்ப் படங்கள் எவையெனக் காண்போம்.

தமிழ்ப் படங்களில் 100 கோடி வசூல் என்ற பெருமையை முதலில் தமிழ்த் திரையுலகிற்குத் தேடித் தந்தது ரஜினிகாந்தின் ‘சிவாஜி’. பிரம்மாண்ட இயக்குநர் எனப் பேரெடுத்த ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் 2007-ல் வெளியான இப்படம் 148 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

#TamilSchoolmychoice

அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்-  ஐஸ்வர்யாராய் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் உலகளவில் சுமார் 283 கோடியை வசூலித்துச் சாதனை புரிந்தது.

பல தடைகளைத் தாண்டி, பல சிக்கல்களைக் கடந்து வெளியான கமலின் ‘விஸ்வரூபம்’படம் உலகமெங்கும் சுமார் 220 கோடியை வசூலித்து, வசூலில் விஸ்வரூபம் எடுத்தது.

அதேபோல், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வித்தியாசமான தோற்றங்களில் கமல் நடித்து வெளிவந்த ‘தசாவதாரம்’படமும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் – எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகளவில் சுமார் 239 கோடியை வசூலித்துச் சாதனை படைத்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படமும், அதையடுத்து அவரது இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படமும் சுமார் 128 கோடி வசூலித்தன.

இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளிவந்த ‘ஆரம்பம்’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 124 கோடியை வசூலித்தது.

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த காஞ்சனா -2 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துச் சாதனை புரிந்தது.

தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், தமனா, அனுஷ்கா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் 24 நாட்களில் 500 கோடியை வசூலித்து, தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான அனைத்துத் திரைப்படங்களின் வரலாற்றையும் முறியடித்தது.

அடுத்து பாகுபலி 2ம் வரவிருக்கிறது. அதுவும் கண்டிப்பாக வசூலில் உலக சாதனை படைக்கும்.

ஆக, தற்போது தமிழ்ச் சினிமா உலகத்தரத்தில் உயர்ந்து வருகிறது எனபதை இது உலகிற்கு எடுத்துரைக்கிறது.