Home கலை உலகம் அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!

அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!

624
0
SHARE
Ad

ABDUL_KALAMசென்னை, ஆகஸ்ட் 7- மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அருமை பெருமைகளை ஆவணமாக்கும் முயற்சியில் தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் மனத்தில் லட்சியக் கனவுகளை விதைத்த விஞ்ஞானி, இந்தியாவை வல்லரசாக்க முயன்ற மாபெரும் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாகத் தயாரிக்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர்.

இந்த ஆவணப் படம் கலாமின் கனவுகளை- லட்சியங்களை உலக அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் இருக்கும்.அது அப்துல் கலாமிற்கு அவர்கள் செலுத்தும் காணிக்கை- சமர்ப்பணம்.

#TamilSchoolmychoice

அப்துல் கலாமின் அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் ஒளிபரப்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கங்கை அமரன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அப்துல் கலாமின் நினைவிடத்தில் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்திய இசை அமைப்பாளர் கங்கை அமரன், “இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகச் சிந்தித்து மாணவர்கள், இளைஞர்களை லட்சியக் கனவு மூலம் உயர்த்தப் பாடுபட்ட மாமனிதர் அப்துல் கலாம். உலக நாடுகளின் பிரச்சினைக்கு அறிவுரை வழங்கிய அவர் இன்று உலகத்தின் ஒளியாக உருவாகியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்; வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’ என்ற பாடல் வரிகள் அப்துல்கலாம் அவர்களுக்குப் பொருத்தமான வரிகளாகும்”எனப் புகழாரம் சூட்டிய அவர்,

“கலாமின் கனவை விதைக்க திரைப்படத்துறையினர் ஆவணப்படம் உருவாக்கி வருகின்றனர். அதை இந்தியாவில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் ஒளிபரப்ப மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.