Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் – புதிய இந்திய விமான நிறுவனத்தின் பெயர்!

ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் – புதிய இந்திய விமான நிறுவனத்தின் பெயர்!

781
0
SHARE
Ad

air-asia-logo-Sliderபுதுடில்லி, மார்ச் 10 – இந்தியாவில் விமான நிறுவனம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏர் ஆசியா நிறுவனத்தின் பெயர் ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (Air Asia (India) Private Limited) என்று அழைக்கப்படும்.

இந்த பெயருக்கான அனுமதியை இந்திய வர்த்தகத் துறை அமைச்சு வழங்கியுள்ளது.

இந்த புதிய நிறுவனம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தை அமைப்பதற்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்திய சட்டப்படி ஒரு நிறுவனத்தை அமைப்பதற்கு முன்னால் அதற்குரிய பெயர் அனுமதியை சம்பந்தப்பட்ட வர்த்தகத் துறை அமைச்சிடம் பெறவேண்டும்.

இந்தியாவின் வெளிநாட்டு முதலீட்டு அனுமதி வாரியம் இந்த இந்திய நிறுவனத்தின் அமைப்புக்கு ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டது.

இந்த இந்திய நிறுவனத்தில் மலேசியாவின் ஏர் ஆசியா நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், டாட்டா அண்ட் சன்ஸ் (TATA & Sons) 30 சதவீத பங்குகளையும், 21 சதவீத பங்குகளை டெலிஸ்ட்ரா டிரேட்பிளேஸ் (Telestra Tradeplace) நிறுவனத்தின் அருண் பாட்டியாவும் (Arun Bhatia) கொண்டிருப்பர்.

80 கோடி ரூபாய் (ஏறத்தாழ 14.5 மில்லியன் அமெரிக்க வெள்ளி) ஆரம்ப முதலீட்டை இந்த நிறுவனம் கொண்டிருக்கும் என்பதோடு, மற்ற இந்திய உள்நாட்டு நிறுவனங்களான ஜெட் ஏர்வேய்ஸ், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களுடன் போட்டியில் ஈடுபடும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவைத் தொடக்கியது டாட்டா நிறுவனத்தின் நிறுவனர் ஜேஆர்டி.டாட்டா என்பதும், 1953ஆம் ஆண்டில் ஏர் இந்தியா தேசிய மயமாக்கப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவின் பல வணிகத் துறைகளில் ஈடுபட்ட டாட்டா நிறுவனம் இதுவரை விமான சேவை வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டதில்லை.

இப்போதுதான் முதன் முறையாக 60ஆண்டுகள் கழித்து ஏர் ஆசியா நிறுவனத்துடன் கைகோர்த்து விமான சேவை வர்த்தகத்தில் டாட்டா ஈடுபட்டுள்ளது.

ஏர் ஆசியா குழுமம் 2012ஆம் ஆண்டில் 13 சதவீத பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சியை அடைந்தது என்பதோடு, கடந்த ஆண்டில் மட்டும் 33.8 மில்லியன் பயணிகளுக்கு மலேசியா, தாய்லாந்து, இந்தோனிசியா நாடுகளிலிருந்து பயண சேவைகளை வழங்கியிருக்கின்றது.