Home Featured நாடு பெர்சே பேரணி: கோத்தாகினபாலுவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

பெர்சே பேரணி: கோத்தாகினபாலுவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

581
0
SHARE
Ad

கோத்தாகினபாலு- காவல்துறையின் தடை மற்றும் கடுமையான எச்சரிக்கைகளையும் மீறி சபா மக்கள் ஆயிரக்கணக்கானோர் பெர்சே பேரணியில் பங்கேற்றனர்.

Bersih 4.0 - Kota Kinabalu

கோத்தாகினபாலுவில் பெர்சே 4.0  (படம்: நன்றி – மலாய் மெயில்)

#TamilSchoolmychoice

கோத்தாகினபாலுவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மஞ்சள் சட்டையுடன் பேரணியில் கலந்து கொண்டனர். தாமான் அவாம் லிகாஸ் டுவா கடற்கரையோரம் பேரணியில் பங்கேற்றவர்கள் நடந்து சென்றனர். ஒரு கட்டத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தூர நீளத்திற்கு போராட்டக்காரர்கள் காணப்பட்டனர்.

இதையடுத்து பேரணியின் தலைமை ஏற்பாட்டாளர் ஜேனி லசிம்பாங் உற்சாத்துடன் காணப்பட்டார். கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றிய அவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Bersih 4.0 - Jannie Lasimbang-Kota Kinabalu-

சபா பெர்சே தலைவர் ஜேனி லசிம்பாங் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றுகின்றார்

“ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நிலையில் என்ன பேசுவது என்றே எனக்குப் பிடிபடவில்லை. தைரியமாக இருக்கும் உங்களுக்கு எனது நன்றி” என்று ஜேனி கூறினார்.

பேரணிக்கு சில நாட்களுக்கு முன்பே உள்ளூர் நாடுகளில் காவல்துறையின் கடும் எச்சரிக்கைகள் வெளியாகின. மேலும் பேரணிக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

எனவே பேரணியில் ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பர் என ஏற்பாட்டாளர்கள் கருதினர். இந்நிலையில் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்றது ஏற்பாட்டாளர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சிட்டி சென்டர் பகுதியை நோக்கி 6 கிலோமீட்டர் தூரத்துக்கு பெர்சே குழுவினர் பேரணியாகச் செல்ல இருப்பதால் கோத்தகினபாலுவில் பரபரப்பு நிலவுகிறது.