Home இந்தியா இந்திய மதச்சார்பின்மையே எனக்கு முக்கியம்- வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் மோடி விளக்கம்

இந்திய மதச்சார்பின்மையே எனக்கு முக்கியம்- வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் மோடி விளக்கம்

528
0
SHARE
Ad

modiபுதுடில்லி. மார்ச்.11- இந்தியாவின் மதச்சார்பின்மையே என்னை பொறுத்தவரை முக்கிய இலக்கு ஆகும்.

நாட்டில் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் நாட்டின் முன்னேற்றத்திற்கென அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

வரும் 21 ம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி காண் திரை தொடர்பு  மூலம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர் மேலும் கூறுகையில்:-

குஜராத் வளர்ச்சி வெளிநாடுகள் கண்டு வியக்கும் அளவிற்கு உள்ளது. இதனை முன்மாதிரியாக கொண்டு பல்வேறு மாநிலங்களும், நாடுகளும் செயல்பட முயற்சிக்கிறது.

குஜராத் குறித்து குறை கூறும் விமர்சனத்தையும் நான் வரவேற்கிறன். நமது நாட்டு இளைஞர்கள் நமது நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றார்.

அமெரிக்க பொருளாதாரத்தில் இந்தியாவின் தாக்கம் இருக்கிறது . மேலும் பேசுகையில், 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு என்றால் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவினுடையது என்று கூறினார்.

புவிவெப்பமயமாதல் குறி்த்து உலக நாடுகள் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இந்திய நாட்டின் எதிர்கால திட்டங்களுக்கு இளைஞர்களின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது.  எனவே அவர்கள் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்‌கிறார்கள்.

குஜராத் மாநில வளர்ச்சி பெற்று வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இதனால் குஜராத்தின் வளர்ச்சியை அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ‌கண்காணித்து வருகிறது. குஜராத்தின் நிர்வாகம் உலக நாடுகளை கவர்ந்துள்ளது.

பலபிரிவுகளாக இருந்தாலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கென அனைவரும் மதச்சார்பின்மையுடன் பணியாற்ற வேண்டும்.

என்னை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது இந்தியாவே முதன்மையாகும்.வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் நாடுமுன்னேறஉதவி புரிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.