Home Featured நாடு பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக அம்பிகா உட்பட மூவரிடம் விசாரணை!

பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக அம்பிகா உட்பட மூவரிடம் விசாரணை!

670
0
SHARE
Ad

Bersih 4.0 Ambigaகோலாலம்பூர்- தடை செய்யப்பட்ட பெர்சே சட்டைகளை அணிந்ததற்காக டத்தோ அம்பிகா, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங் மற்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் ஆகிய மூவரும் காவல்துறையில் விளக்கம் அளித்துள்ளனர்.

பெர்சே 4.0 பேரணி நடைபெறுவதற்கு முந்தைய நாள் அந்த டி-சட்டைகளை அணிய காவல்துறை தடை விதித்தது. எனினும் மேற்குறிப்பிட்ட மூவரும் அந்த சட்டைகளை அணிந்ததால், அது குறித்து விளக்கம் அளிக்க வருமாறு பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மூவரும் புதன்கிழமை அங்கு சென்றனர். வழக்கறிஞர் லத்தீஃபா கோயா அவர்களுடன் சென்றிருந்தார்.

#TamilSchoolmychoice

“மூன்று பேரிடமும் தடை செய்யப்பட்ட பெர்சே சட்டையை அணிந்திருந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. மேலும் புதன்கிழமை அன்று நடைபெற்ற செஞ்சட்டை பேரணி குறித்தும் போலிசார் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். பெர்சே 4 பேரணி வெற்றிகரமாக அமைந்ததா என்றும் செஞ்சட்டை பேரணி குறித்தும் கருத்துரைக்குமாறு போலிசார் கேட்டனர். இத்தகைய கேள்விகள் அர்த்தமற்றவை.”

“தடை செய்யப்பட்ட சட்டைகளை அணிந்தது தொடர்பாக மட்டுமே காவல்துறை விசாரிக்க வேண்டும். அதை விடுத்து செஞ்சட்டை பேரணி குறித்து கருத்து கேட்டுள்ளனர்” என்று வழக்கறிஞர் லத்தீஃபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே பெர்சே சட்டைகளை அணிய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து வழக்கு தொடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக டத்தோ அம்பிகா தெரிவித்துள்ளார்.