Home Featured நாடு இடைத்தேர்தல் உரை, பெர்சே சட்டை குறித்து அஸ்மின் அலியிடம் விசாரணை!

இடைத்தேர்தல் உரை, பெர்சே சட்டை குறித்து அஸ்மின் அலியிடம் விசாரணை!

675
0
SHARE
Ad

azmin ali mகோலாலம்பூர்- பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின் போது ஆற்றிய உரை குறித்தும், தடை செய்யப்பட்ட பெர்சே டி சட்டையை அணிந்தது தொடர்பிலும் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பெர்சே தலைவர் டத்தோ அம்பிகா, பிகேஆர் சட்ட ஆலோசகர்கள் லத்தீஃபா கோயா மற்றும் சுரேந்திரன் ஆகியோர் இருந்தனர். காலை 10.15 முதல் 11.50 மணிவரை இந்த விசாரணை நடைபெற்றது.

“காவல்துறையின் சம்மனையடுத்து இங்கு வந்துள்ளேன். டாங் வாங்கி மற்றும் புக்கிட் அம்மானில் இருந்து தனித்தனி குழுக்கள் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கின்றன,” என்று செய்தியாளர்களிடம் அஸ்மின் அலி பின்னர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அண்மைய சிவப்புச் சட்டை பேரணி குறித்து கருத்து கேட்டபோது, அப்பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது தமக்கு வருத்தமளித்ததாகக் கூறினார்.

“அந்தப் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதன் விளைவைப் பாருங்கள். விரும்பதாக பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனால் இன மற்றும் மத வெறுப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்,” என்று அஸ்மின் அலி மேலும் தெரிவித்தார்.