Home Featured நாடு நாட்டையே அச்சுறுத்தும் தனிஒருவன்?

நாட்டையே அச்சுறுத்தும் தனிஒருவன்?

538
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர் – ‘ஒட்டுமொத்த தேசமும் தனிஒருவனால் அச்சுறுத்தப்படுகின்றது’ என்ற தலைப்பில் இன்று மலேசியாகினியில் இடம்பெற்றிருந்த ‘உங்கள் கருத்து’ பகுதி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

யார் இந்த ஜமால்? திடீரென எப்படி இத்தனை துணிச்சலோடு பேட்டியளிக்கிறார் என்று மக்கள் அனைவரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு, கடந்த செப்டம்பர் 16-ம் தேதி நடத்தப்பட்ட சிவப்புப் பேரணியில் தொடங்கி, அண்மைய காலமாக அவரது அறிக்கைகளும், பேட்டிகளும் நாட்டையே அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகக் கருதப்படுகின்றது.

சுங்கை பெசார் அம்னோ தலைவரான டத்தோ ஜமால் முகமட் யூனோசின், அண்மைய அறிக்கை பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் உள்ள வியாபாரிகளை கதிகலங்கச் செய்துள்ளது. அதாவது பெட்டாலிங் ஸ்ட்ரீட் பகுதியில் போலியான பொருட்கள் வியாபாரம் செய்யப்படுவதாகவும், இன்று வெள்ளிக்கிழமைக்குள் அதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை பேரணி நடத்துவோம் என்றும் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அதை விட இன்னும் ஒருபடி மேல் போய், பெட்டாலிங் ஸ்ட்ரீட் வியாபாரிகள் அந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வியாபாரத்தில் ஒருபகுதியை மற்ற இனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து மலேசியாகினி வாசகர்களில் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் என்னவென்றால், இது போன்ற அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிடும் ஜமாலை ஏன் காவல்துறை இன்னும் விசாரணை செய்யாமல் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், நினைத்த நேரத்தில் பேரணி நடத்தும் அளவிற்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? ஜமால் தான் இந்த நாட்டின் தலைவரா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, மற்றொரு இணையதளத்திற்கு இன்று ஜமால் அளித்துள்ள பேட்டியில், தான் கூறியவற்றை ஊடகங்கள் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்றும், பேரணி நடத்தப்படலாம் என்று மட்டுமே தான் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு: செல்லியல்