Home Featured நாடு கட்டியணைத்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய மலேசியர்கள்! (பிரபலமாகிவரும் காணொளி)

கட்டியணைத்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய மலேசியர்கள்! (பிரபலமாகிவரும் காணொளி)

635
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தோன்றிய காலம் தொட்டு பல்லின மக்களும் ஒற்றுமையாக, அன்போடு வாழ்ந்து வரும் மலேசியாவில், அண்மைய காலமாக சில தரப்பினருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இனவாத பிரச்சனைகள், பொதுமக்களிடையே லேசான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

கிராமப்புறங்களிலும், தோட்டங்களிலும் ஏன் பல முக்கிய நகரங்களிலும் இன்று வரை, வெவ்வேறு இனமாக இருந்தாலும் நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி என ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி அவர்களோடு அப்பண்டிகை நாளைக் கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது.

அப்படி இருக்கையில், சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக வீணான பிரச்சனைகளை ஏற்படுத்தி மலேசியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியுமா? முடியாது என்பதே அனைவரின் கருத்தும்.. பிரார்த்தனைகளும்..

#TamilSchoolmychoice

அந்த வகையில், மலேசிய மாணவர்களான சதீஸ்வரன் சத்யன், ஜியான்தட், சுக்ரிமார்ச் ஆகிய மூவரும் மலேசியர்களின் ஒற்றுமை வலுவாக உள்ளதா? என்பதை அறிய கோலாலம்பூரில் நடத்திய சோதனையின் காணொளி நட்பு ஊடகங்களில் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.

“முதலில் நான் ஒரு மலேசியன் அதன் பின்னர் தான் மற்றவை”, “இனவாதத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற வாசகங்களுடன் கண்களை கருப்புத் துணி ஒன்றால் கட்டிக் கொண்டு வீதியில் நின்ற அந்த இளைஞர்கள், நீங்கள் இதை ஒப்புக் கொள்வதாக இருந்தால் எங்களை அணைத்து, கைகுலுக்கி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆரம்பத்தில் வீதியில் போவோர் வருவோர் ஏதோ விளையாட்டாக செய்கிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ, ஆனால் அதன் பின்னர் வந்து குவிந்தது பாருங்க அன்பு! அடடா.. அது தான் மலேசியா!

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்தக் காணொளியை இதுவரை 88,648 பேர் பார்வையிட்டுள்ளனர்.

அந்தக் காணொளியை இங்கே காணலாம்:-

தொகுப்பு: செல்லியல்