Home Featured நாடு வெளிநாடு செல்லத் தடையை எதிர்த்து வழக்காட டோனி புவாவுக்கு நீதிமன்றம் அனுமதி!

வெளிநாடு செல்லத் தடையை எதிர்த்து வழக்காட டோனி புவாவுக்கு நீதிமன்றம் அனுமதி!

684
0
SHARE
Ad

tony-pua1-250613கோலாலம்பூர் – நாட்டை விட்டு வெளியேற, மலேசியக் குடிநுழைவுத் துறை தனக்கு விதித்திருக்கும் தடையை எதிர்த்து, சீராய்வு மனு (judicial review) ஒன்றை சமர்ப்பித்து வழக்காட ஜசெக தலைவர்களில் ஒருவரும், பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினருமான டோனி புவாவுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

டோனி புவா சார்பில் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அஸ்மாபி முகமட் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கினார்.

குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் மற்றும் மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹாசான் பிரதிநிதித்தார்.

#TamilSchoolmychoice

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும்.

ஜனநாயக செயல்கட்சியின் தேசிய பிரச்சாரப் பகுதி செயலாளருமான டோனி புவா தான் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என குடிநுழைவுத் துறை கடந்த ஜூலை 22ஆம் தேதி விதித்த தடை உத்தரவு சட்டவிரோதமானது என்றும் செல்லாது என்றும் வழக்கு தொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் தங்களின் அதிகார வரம்புக்கு மீறி செயல்பட்டுள்ள காரணத்தால் தனக்கு எதிரான தடை உத்தரவு இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தனக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் டோனி புவா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.