Home Featured தொழில் நுட்பம் ஏர் ஏசியா செயலியில் தமிழ் மொழி அறிமுகம்!

ஏர் ஏசியா செயலியில் தமிழ் மொழி அறிமுகம்!

596
0
SHARE
Ad

air asiaகோலாலம்பூர் – “கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் எழுத்துக்களின் தரம் அதிகரிக்கும்”  – இது உலகத் தமிழ் இணைய 12-ம் மாநாட்டில் முரசு மென்பொருள் மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் உரையில் இடம் பெற்ற முக்கிய கருத்து.

இந்த கருத்தின் பிரதிபலிப்பாகத் தான் இன்று பல்வேறு கையடக்கக் கருவிகளின் செயலிகளிலும் தமிழை உள்ளிடுவது எளிதான ஒன்றாகிவிட்டது. அந்த வரிசையில் சமீபத்தில் புதியதாக ஏர் ஏசியாவின் பயணச் செயலியில், புதிய மொழியாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஏர் ஏசியா சார்ந்த அனைத்து தகவல்களையும் தமிழிலேயே தெரிந்து கொள்ள முடியும். பயணச் சீட்டு முன்பதிவுகளையும் தமிழிலேயே தொடர முடியும். இதற்காக செயலியின் ‘செட்டிங்க்ஸ்’ (settings) தேர்வில் ‘தமிழை’ பிரதான மொழியாக தேர்வு செய்தால் போதுமானது.

#TamilSchoolmychoice

ஏர் ஏசியா செயலியில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்திய மொழி இந்தி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.