Home உலகம் ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் – பாரபட்சம் பார்க்கிறாரா ஆங் சாங் சூகீ?

ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் – பாரபட்சம் பார்க்கிறாரா ஆங் சாங் சூகீ?

556
0
SHARE
Ad

யங்கோன் – மியான்மரில் பெரும் பிரச்சனையை கிளப்பி வரும் ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வந்த மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தினை பதிவு செய்தார்.

அவர் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“இதனை சிறிய பிரச்சனை என்று நான் கூறவில்லை. எனினும், இந்த விவகாரத்தை மிகைப்படுத்தாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் பாதுகாப்பான சமுதாயத்தை அமைப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தேர்தலில் இரு கட்சிகளிலும் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் மனித உரிமைகள் மையம் ஒன்று மேற்கொண்ட ஆய்வுகளின் படி ரோஹின்யா குடியேறிகள், மியான்மரில் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு சூகீ, இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி இருப்பது உலக நாடுகளை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

சூகீ வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ரோஹின்யா குடியேறிகள் விவகாரம் தீர்வுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், சூகீ அளித்துள்ள இந்த பேட்டியின் மூலம் அவரும் ரோஹின்யா குடியேறிகளிடம் பாரபட்சம் பார்ப்பது தெளிவாகிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.