Home Featured தொழில் நுட்பம் 2016-ல் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் ப்ளூடூத் தொழில்நுட்பம்!

2016-ல் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் ப்ளூடூத் தொழில்நுட்பம்!

609
0
SHARE
Ad

bluetooth (1)கோலாலம்பூர் – கம்பி இல்லாத் தொழில்நுட்பமான (Wireless) ப்ளூடூத்தில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை மேம்படுத்த வயர்லெஸ் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ப்ளூடூத் தொழில்நுட்பம் இல்லாத தொழில்நுட்ப கருவிகளே இல்லை என்று ஆகிவிட்ட நிலையில், இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர ‘ப்ளூடூத் ஸ்பெஷல் இன்டிரெஸ்ட் குரூப்’ (Bluetooth Special Interest Group)  முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்தவருடம் முதல் உற்பத்தியாகும் தொழில்நுட்ப கருவிகளில் ப்ளூடூத் வசதி வழக்கத்தை விட இரு மடங்கு வேகமானதாகவும், எல்லை வரம்பு (Range) நான்கு மடங்கு அதிகமானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக எஸ்ஐஜி (Special Interest Group)-ன் தலைவர் கூறுகையில், “ப்ளூடூத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும், உறுப்பினர்களும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.