Home Featured உலகம் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த ரஷ்ய போர் விமானி!

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த ரஷ்ய போர் விமானி!

562
0
SHARE
Ad

151124093549-russia-jet-syria-crash-1-large-169அங்காரா – சிரியாவில் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்ய போர் விமானி தப்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ரஷ்ய போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய பின்னர் சிரியா எல்லையில் வானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தை துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இதற்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் அவசர வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது.

#TamilSchoolmychoice

இதற்கான ஆதாரத்தையும் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர். இதனால் மற்றொரு விமானி என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், அந்த விமானி பாதுகாப்பாக இருப்பதாக தற்போது புதுத்தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இத்தகவலை வெளியிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல் பிரான்ஸ் நாட்டுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் ஓர்லோவும் வானொலி பேட்டி ஒன்றில், ரஷ்ய விமானி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.

“விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இரு விமானிகளில் ஒருவர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுவிட்டார். மற்றொரு விமானி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து எப்படியோ தப்பிவிட்டார். அவரை எல்லைப் பகுதியில் கண்ட சிரிய ராணுவம், உடனடியாக மீட்டு அவரைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது” என ஓர்லோவ் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான மோதல் விரும்பவில்லை: துருக்கி அதிபர்

இதற்கிடையே போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை என துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் கூறியுள்ளார்.

தங்கள் நாட்டின் எல்லைப் பாதுகாப்பும், இறையாண்மையும் மீறப்படும் வேளையில் தாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என யாருமே எதிர்பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய போர் விமானம் மீதான தாக்குதல் நடவடிக்கையானது துருக்கியின் பாதுகாப்பு மற்றும் அதன் சகோதர நாடுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“இந்தச் சம்பவத்தை பெரிதுபடுத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. பதற்றத்தையும், பிரச்சினைகளையும் உருவாக்க துருக்கி அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது. அமைதி மற்றும் பரஸ்பர பேச்சுவார்த்தை போன்றவற்றில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.