Home Featured தொழில் நுட்பம் டெலிகிராமை முடக்கும் வாட்சாப்!

டெலிகிராமை முடக்கும் வாட்சாப்!

688
0
SHARE
Ad

telegram_whatsapp_ndtvகோலாலம்பூர் – வாட்சாப் பயனர்கள் தங்களது ‘இன்பாக்சில்’ (Inbox) telegram.me or telegram.org என டைப் செய்து மற்ற பயனர்களுக்கு அனுப்பினால், குறிப்பிட்ட அந்த இணைப்பு (Link) மட்டும், வழக்கமான இணைப்பாக இல்லாமல், சாதாரண எழுத்துக்களாகவே செல்லும். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

வாட்சாப்பின் போட்டி நிறுவனமான டெலிகிராமின் வளர்ச்சியை முடக்கும் விதமாக வாட்சாப் நிறுவனம், டெலிகிராம் சார்ந்த இணைப்புகளை சாதாரண எழுத்துக்களாக மாறும் வகையில் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது. ஒருவேளை இணைப்புகளாக இருந்தால், அதனை கிளிக் செய்யும் போது பயனர்கள் டெலிகிராம் தளத்திற்கு செல்ல நேரிடும். இதனை தடுக்கும் நோக்கத்துடன் தான் இந்த கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அண்டிரொய்டு திறன்பேசிகளில் மட்டும் உள்ள இந்த நடைமுறை, ஐஒஎஸ் கருவிகளிலும் மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக டெலிகிராம் பயனர்கள் வாட்சாப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயத்தில், டெலிகிராமில் வாட்சாப் தொடர்பான இணைப்புகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.