Home Featured கலையுலகம் ஜன 28 முதல் மலேசியத் திரையரங்குகளில் ‘ஒலாபோலா’ – பிரம்மாண்ட வெளியீடு!

ஜன 28 முதல் மலேசியத் திரையரங்குகளில் ‘ஒலாபோலா’ – பிரம்மாண்ட வெளியீடு!

899
0
SHARE
Ad

Olabolaகோலாலம்பூர் – ஒலாபோலா திரைப்படத்தின் முன்னோட்டம், ‘அரினா சயாஹா’ (Arena Cahaya) மற்றும் ‘வி வில் பிலீவ் அகைன்’ (WE WILL BELIEVE AGAIN) பாடலை அண்மையில் ‘அஸ்ட்ரோ ஷா’ வெளியிட்டது.

புகழ்பெற்ற பாடகி ஜீ அவி பாடிய ‘அரினா சயாஹா’ பாடலை அடுத்து ஒலாபோலா திரைப்படத்தின் குழுவினர் இம்முறை கேட்பவர்களின் நினைவில் நிலைத்து நிற்கக்கூடிய இசையுடன் உற்சாகமான ‘வி வில் பிலீவ் அகைன்’ எனும் பாடலை தயாரித்துள்ளார்கள்.

விருது வென்ற புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஒன் சான் இசையமைத்த இப்பாடலைப் பிரபல உள்ளூர் பாடகர் அரில், 2010-ஆம் ஆண்டின் அஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் போட்டியின் வெற்றியாளர் கணேசன் மனோகரன், ஜெரால்டின் கான் மற்றும் நிக்கோல் லாய் ஆகியோர் இப்பாடலைப் பாடியுள்ளார்கள்.

#TamilSchoolmychoice

அஸ்ட்ரோவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹென்ட்ரி டான் கூறுகையில், ஒலாபோலா திரைப்படம் நம்மைப் பற்றியும் இந்த தேசத்தைக் குறித்தும் அதன் மக்களையும் மதிப்புகளையும் சித்தரிக்கும் கதையாகும்.

Olabola 270-ஆம் மற்றும் 80-ஆம் ஆண்டுகளில், நம்முடைய மலேசியா ஹரிமாவ் மலாயா கால்பந்து அணி எதிர்நோக்கிய வேற்றுமைகள் மற்றும் சவால்களை இத்திரைப்படத்தில் காணலாம்.  ஒரு குழுவாகச் செயல்பட்டு எவ்வாறு தடங்களைத் தண்டி வெற்றி பெறுகின்றார்கள் என்பதை இப்படத்தின் திரைக்கதையாகும்.

இத்திரைப்படத்தில் வலம் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மகிமையும், அவர்களின் நம்பிக்கைத் தன்மையும் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றையும் படம் பிடித்து காட்டுகின்றது ஒலாபோலா. உணர்ச்சி மற்றும் உத்வேகம் நிறைந்த இத்திரைப்படம், அடுத்த ஆண்டை வரவேற்கும் மலேசியத் திரைப்படமாக விளங்கும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

‘ஒலாபோலா’ அழகான உற்சாகத்தை ஊட்டக்கூடிய ஒரு திரைக்கதையாகும். இவை நம் நாட்டின் மலேசியர்களுக்குச் சம்பந்தப்பட்ட சித்தரிக்கும் கதையாகும். ஆகையால், இத்திரைப்படம் நம் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் இத்திரைப்படம் உணர்த்துகின்றது. அதுமட்டுமின்றி, வெற்றியை கொண்டாடும் அந்த அழகான தருணத்தையும் இதன் வாயிலாகக் கண்டுகளிக்கலாம். ஆதலால், ‘வி வில் பிலீவ் அகைன்’ பாடல் வெற்றியைக் கொண்டாடுவதை மையப்படுத்தி இசையமைக்கப்பட்டுள்ளது.

Olabola 1இப்பாடலின் பாடலாசிரியர் ஒன் சான் கூறுகையில், ‘வி வில் பிலீவ் அகைன்’ பாடல் வரிகள் மலேசியாவின் சிறப்புகளை உள்ளடக்கியதாகவும் மக்கள் வெற்றி கொண்டுவதாகும்  இருக்க வேண்டும் என்று இயக்குனர் சியு கெங் குவான் கேட்டுக் கொண்டார் என்றார் அவர்.  அதனைக் கருத்தில் கொண்டு மலாய், மேண்டரின், தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழியில் ‘வி வில் பிலீவ் அகைன்’ எனும் பாடலை எழுத்தி இசையமைத்துள்ளோம் என்று ஒன் சான் தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து, இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், ஒன் சான் ஆர்கெஸ்ட்ரா (orkestra) இசையை இத்திரைப்படத்தின் பிண்ணனி இசையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கடுமையான உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்க்கும் படமாகும். ஒலாபோலா திரைப்படத்தின்  இயக்குனர் சியு கெங் குவான் கூறுகையில், 80-ஆம் நூற்றாண்டை மையப்படுத்தி இருக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் பிண்ணனி காட்சிகளை 80-ஆம் நூற்றாண்டு போல் அல்லாமல் இன்றைய காலத்தைக் காட்டும் காட்சிகளாகக் காட்டுவதற்கு காட்சி விளைவுகள் ( Visual Effects)(VFX) பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சியில் பச்சை திரை தொழில்நுட்பமும் (Green screen technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, கால்பந்து விளையாட்டாளர்கள் பயிற்சியின் போது இராணுவ ஹெலிகாப்டர் ஏறிச் செல்லும் காட்சி, ஃபன் ஃபேர் பகுதியில் ஃபெரிஸ் வீல் கண்டு களிக்கும் காட்சி, விளையாட்டு கடைகள் போன்ற காட்சிகள் அடங்கும்.

‘தி ஜேர்னி’ திரைப்படத்தின் இயக்குனர் சியு கெங் குவான் கைவண்ணத்தில் வெளியாகவுள்ள இத்திரைப்படம், 1980-ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள நம் நாட்டின் தேசிய கால்பந்து அணி எதிர்நோக்கும் சவால்களைச் சித்தரிக்கின்றது. இருப்பினும், தங்களுடைய பிரச்சனைகளை ஒதுக்கி தடைகளைத் தாண்டி ஒற்றுமையாக இணைந்து இலட்சியத்தை அடைய பாடுபடுகின்றார்கள்.

வூஹூ பிக்சர்ஸ் உடன் இணைந்து ஆஸ்ட்ரோ ஷா, கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் மற்றும் மல்டிமீடியா என்டர்டெய்ன்மெண்ட் செண்ட்ரியான் பெர்ஹாட் ஒலாபோலா தயாரிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி உள்ளூர் திரையரங்களில் ஒலா போலா திரைப்படம் வெளியீடு காணவுள்ளது. இத்திரைப்படத்தில் போரனட் பலாரே, சீ ஜூன் சேங், முகமட் லூக்மான், சரண் குமார், மேரியான் தான் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

பெனசோனிக் மற்றும் மைலோ இப்படத்தின் முக்கிய ஆதரவாளர்களும் முன்சி (Munchy) இணை ஆதரவாளர் ஆகும். ஒலாபோலா விற்பனைப் பொருட்களான சட்டைகள், ஹூடிஸ் போன்றவற்றை www.3ciety.com. அகப்பக்கத்தில் வாங்கலாம்.

இத்திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு www.olabola.com.my, www.olabola.tv, www.youtube.com/astroshaw,www.facebook.com/astroshawமற்றும் www.instagram.com/astroshaw. அகப்பக்கங்களை நாடலாம்.

கதைச்சுருக்கம்:

1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி முடங்கிக் கிடந்த தேசிய கால்பந்து அணியில் வேற்றுமைகளையும் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து வெற்றியைத் தேடி போராட்டும் அணியின் ஒற்றுமையைச் சித்தரிக்கும் கதை ‘ஒலாபோலா’ திரைப்படமாகும். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்குனர் சியு கெங் குவான் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் தேசிய கால்பந்து அணியின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு திரைப்படமாக அமையவுள்ளது.