Home Featured நாடு தேமு உடன் இணையாது பாஸ்- இஸ்லாமை வலுப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம்!

தேமு உடன் இணையாது பாஸ்- இஸ்லாமை வலுப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம்!

469
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentகோலாலம்பூர் – தேசிய முன்னணியுடன் இணையப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பாஸ் கட்சி, இஸ்லாமை வலுப்படுத்தும் எந்தக் கட்சிக்கும் ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷூரா கவுன்சிலின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் நிக் மொகமட் ஜவாவி சாலே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குரானின் அடிப்படையில் நல்லவைகளுக்கும், பக்தி மார்க்கத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்கும் இஸ்லாமியக் கொள்கையை பாஸ் கடைபிடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய முன்னணியுடன் இணையப் போவதில்லை என்றும், ஆனால் தேசிய மற்றும் மேம்பாட்டுப் பிரச்சனைகளில் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.