Home Featured வணிகம் அமெரிக்க பங்கு சந்தை 391 புள்ளிகள் வீழ்ச்சி! எண்ணெய் விலை இறக்கம் – சீனா பிரச்சனைகளால்...

அமெரிக்க பங்கு சந்தை 391 புள்ளிகள் வீழ்ச்சி! எண்ணெய் விலை இறக்கம் – சீனா பிரச்சனைகளால் பாதிப்பு!

503
0
SHARE
Ad

நியூயார்க் – நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை 400 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது, உலகமெங்கிலும் பொருளாதார நிபுணர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

New York Stock Exchangeஅண்மையில் எண்ணெய் விலைகள் கடுமையாக இறக்கம் கண்டது – சீனாவில் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கத் தொடங்கியது – ஆகிய இரண்டு காரணங்களும் அமெரிக்கப் பங்குச் சந்தையையும், அதன் முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையையும்  பாதித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் 537 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்ட, டௌ ஜோன்ஸ் எனப்படும் அமெரிக்க சந்தை நேற்று மூடப்பட்டபோது, 391 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க பங்கு சந்தையைப் பொறுத்தவரை ஒரு சில புள்ளிகள் கீழ் இறங்கினால், அதனால், பல கோடி ரிங்கிட் மதிப்பை பட்டியலிடப்பட்டுள்ள பல நிறுவனங்கள் இழக்கும் என்பது வணிக விதியாகும்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்த நிலைமைக்கு அமெரிக்க பங்குச் சந்தை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க பங்குச் சந்தை எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதைக் காண உலக பொருளாதார நிபுணர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.