Home Featured நாடு இனி உண்மையான வருகையாளர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி – மலேசியா முடிவு!

இனி உண்மையான வருகையாளர்களுக்கு மட்டுமே நாட்டிற்குள் அனுமதி – மலேசியா முடிவு!

694
0
SHARE
Ad

ïmmigirationகோலாலம்பூர் – ‘உண்மையான’ வருகையாளர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிப்போம் என மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்துள்ளது.

கடந்த வாரம், ஜகார்த்தாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மலேசியாவின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கடும் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசியக் குடிநுழைவு இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபா இப்ராகிம்(படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகையாளர்களின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வுகள் மட்டுமல்லாது கூடுதலான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.”

#TamilSchoolmychoice

“குறிப்பாக உயிரியளவுகள் தரவுகள் (Biometric Data) மூலம் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். சந்தேகத்துக்கிடமான நபர்களை ஆராய்வதற்கு குடிநுழைவு அதிகாரிகளுக்கு முழு உரிமை உள்ளது. அப்படியான நபர்கள் குடிவரவுச் சட்டம் 1959/63 பிரிவு 8-ன் கீழ் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை (Not TO Land) விதிக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கடந்த வருடம் மட்டும் 68,363 தனி நபர்களுக்கு என்டிஎல் (Not TO Land) அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விசயத்தில் பொது மக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.