Home Featured நாடு சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி!

சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முறையான அனுமதி!

587
0
SHARE
Ad

Ahmad Zahid Hamidiபுத்ராஜெயா – நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் திட்டம் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பணிநிமித்தமான அதிகாரப்பூர்வ அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்றார் அவர்.

இந்தத் திட்டமானது முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், இதன்வழி நாட்டில் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள 20 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர் என்றார்.

#TamilSchoolmychoice

மேலும் தொழிலாளர்களை பணிமுகவர்கள் (agent) ஏமாற்றுவது தடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களுக்கான லெவி தொகையை முதலாளிகள் செலுத்தாமல் இருப்பதும் தடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே, புதிய லெவி கட்டணங்கள் அமல்படுத்தப்பட்டது தொடர்பில் முதலாளிகள் தரப்புடன் சீன புத்தாண்டிற்குப் பிறகு விவாதிக்கப்படும் என்றார் சாகிட் ஹமிடி.