Home Featured நாடு பத்துமலை வனப்பகுதியில் தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டம்!

பத்துமலை வனப்பகுதியில் தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டம்!

510
0
SHARE
Ad

Batucavesகோலாலம்பூர் – கடும் வெப்பம் காரணமாக நேற்று பத்துமலையைச் சுற்றியுள்ள மரங்களில் பரவிய காட்டுத்தீயை அணைக்க இன்றும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இன்று நிலைமை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், நாளையும் தாங்கள் பணிகளைத் தொடரவுள்ளதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் துணை இயக்குநர் மொகமட் சான் ஹாருல் தெரிவித்துள்ளார்.

“மலைப்பகுதியில் மூன்றரை ஏக்கர் பரப்பளவிற்கு இன்னும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது” என்று இன்று பெர்னாமாவிற்கு அளித்த தகவலில் மொகமட் சான் ஹாருல் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

செலாயாங், கோம்பாக் மற்றும் வாங்சா மாஜு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 70 தீயணைப்பு வீரர்களும், 3 தீயணைப்பு வாகங்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பத்துமலையில் அருகே கம்போங் ஸ்ரீ கோம்பாவில் வசித்து வரும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய தேவையிருக்காது என்றும் மொகமட் சான் ஹாருல் தெரிவித்துள்ளார்.

பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள மலையைச் சுற்றியுள்ள 12 ஹெக்டர்ஸ் மலைப்பகுதிகளில் நேற்று காலை சிறிய அளவில் பற்றிய நெருப்பு, வனப்பகுதி முழுவதும் பரவியது.

சில தரப்பினர் குப்பைகளை எரித்தது தான் வனப்பகுதியில் தீப்பற்ற காரணம் என நம்பப்படுகின்றது.