Home Featured இந்தியா அரசியல் பார்வை: இந்தியா முழுமையும் உன்னிப்பாகப் பார்க்கப் போகும் முக்கிய மாநிலத் தேர்தல்கள்!

அரசியல் பார்வை: இந்தியா முழுமையும் உன்னிப்பாகப் பார்க்கப் போகும் முக்கிய மாநிலத் தேர்தல்கள்!

733
0
SHARE
Ad

India-2016 May - state elections- statesஇன்று தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, ஒட்டு மொத்த இந்தியாவின் அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த பார்வையும் நான்கு முக்கிய மாநிலங்களை நோக்கித் திரும்பியுள்ளது.

இதில் தமிழகமும், புதுச்சேரியும் ஏறத்தாழ ஒரே மாநிலமாகத்தான் பார்க்கப்படுகின்றது. காரணம், மொழி, இனம், போட்டியிடும் கட்சிகள் என்ற அடிப்படையில் இந்த இரண்டு மாநிலங்களும் ஒரே மாதிரியான அரசியல் சிந்தனையைப் பிரதிபலிக்கக்கூடியவை.

Rangasamy-Puducherry-Chief-Minister-புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி…

#TamilSchoolmychoice

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மத்தியில் பாரதிய ஜனதாவின் (பாஜக) பெரும்பான்மை ஆதிக்கத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றாலும், இந்த மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக ஏதோ ஒரு விதத்தில் இந்திய அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, பாஜகவின் அரசியல் வியூகங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் அந்தக் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி இருக்கப் போகின்றது என்பதை நிர்ணயிக்கப் போகும் களமாகவும் இந்தத் தேர்தல்கள் அமையப் போகின்றன. அதே நிலைமைதான் காங்கிரசுக்கும்!

sonia-rahul-gandhi-parliament-protest_650x400_41438929022சோனியா-ராகுல் காந்தி என்ற தாய்-மகன் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள, காங்கிரசுக்கு இன்னும் மக்கள் ஆதரவு இருக்கின்றதா அல்லது கடந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த மக்கள் நிராகரிப்பு இன்னும் தொடருமா என்ற கேள்விக்கான விடையையும் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வழங்கக் கூடும்.

அதே வேளையில் இன்னொரு கோணத்தில் பார்த்தால், தேர்தல் நடைபெறப் போகும் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களுக்கே உரிய  உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் இருப்பதால், தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், அவை, தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டையும் அரசியல் ரீதியாகப் பாதிக்காது என்றும் கருதப்படுகின்றது.

தமிழகத் தேர்தல் குறித்து ஏற்கனவே நிறைய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களில் அரசியல் நிலவரங்கள் எப்படி இருக்கும் என்பதை மேலோட்டமாகப் பார்க்கலாமா?

அசாம்

இந்தியாவின் மலைப் பிரதேச மாநிலம் – மிகவும் பின்தங்கிய மாநிலம் அசாம். தேயிலையும், மரம் வெட்டும் தொழிலும் பிரதானமாக இருக்கும் வடமேற்கு மாநிலம் இது. 126 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஒருகாலத்தில் மாணவர் கட்சியான அசாம் கண பரிஷத் வலுவான கட்சியான திகழ்ந்ததோடு, இரண்டு முறை தனியாக ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.

tarun-gogoi-assam cm -காங்கிரஸ் கட்சியின் சார்பிலான நடப்பு அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய்…

ஆனால்,இந்த முறை பாஜக தலைமையேற்றுள்ள கூட்டணியில் 26 சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு இணைந்துள்ளது அசாம் கண பரிஷத்.

மேலும் சில சிறிய கட்சிகளும், பூர்வ குடிகளைப் பிரதிநிதிக்கும் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலில் 7 நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிடித்து, இந்த மாநிலத்தில் அழுத்தமாகக் கால் பதித்திருக்கின்றது பாஜக.

தற்போது ஆட்சியில் இருப்பது தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் கட்சியாகும். தொடர்ந்து மூன்றாவது தவணையாக முதலமைச்சராகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார் தருண் கோகோய்.

காங்கிரஸ் தலைமையைக் கொண்டு, மற்றக் கட்சிகளுடன் இணைந்து, இவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து முதல்வராகத் தொடர்வாரா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி, ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற கேள்வியோடு அசாம் சட்டமன்றத் தேர்தல் எதிர்கொள்ளப்படுகின்றது.

மேற்கு வங்காளம்

34 ஆண்டுகாலம் மேற்கு வங்காளத்தில் அசைக்கமுடியாத ஆட்சியை வழங்கிவந்த கம்யூனிஸ்ட் கட்சியை அடியோடு வேரறுத்து புதிய ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் மூலம் அமைத்தார், ஒரு சாதாரண பெண் அரசியல்வாதியான மம்தா பானர்ஜி.

jayalalitha-mamtha-1ஒரே நேரத்தில் தங்களின் மாநிலங்களில் தேர்தல் களம் காணப் போகும் ஜெயலலிதா – மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி….

மீண்டும் அத்தகைய மாயவித்தையை அவரால் நிகழ்த்திக் காட்ட முடியுமா? இந்த முறை மத்தியில் ஆட்சியில் அமைத்துள்ள பாஜக, கணிசமான அளவுக்கு மேற்கு வங்காளத்தில் விசுவரூபம் எடுத்து நிற்கின்றது.

காங்கிரசும்-இடது கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், காங்கரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி, பாஜக என மூன்று அணிகள் மோதும் என எதிர்பார்க்கப்படும் இந்த மாநிலத் தேர்தலில் இன்னும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ்தான் முன்னணியில் இருக்கின்றது –  அவரே மீண்டும் வெல்வார் என அரசியல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஏழைகளுக்கு உதவும் மம்தாவின் திட்டங்கள், 34 ஆண்டுகால ஆட்சியினால் கம்யூனிஸ்ட் கட்சி மீது காட்டப்படும் வெறுப்பு, ஆகியவற்றைத் துணை கொண்டு மம்தா மீண்டும் வாகை சூடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலம் என்பதால், ஆறு கட்டங்களாக இங்கு தேர்தல் நடைபெறுகின்றது.

கேரளா

அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாநிலம் கேரளா, 140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இங்கும் தமிழகத் தேர்தல் நடைபெறும் அதே மே 16ஆம் தேதி வாக்களிப்பு நுடைபெறுகின்றது.

umman chandi-kerala cmகாங்கிரஸ் கட்சியின் சார்பிலான நடப்பு கேரள முதல்வர் உம்மன் சாண்டி…

நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இருந்த இரண்டு மாநிலங்கள் கேரளாவும், மேற்கு வங்காளமும் என்ற முறையில், எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள், இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலத் தலையெழுத்தை எழுதப் போகின்றன.

கடந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு தேர்தல்களில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி, படித்தவர்கள் மோடி மீது வைத்திருக்கும் ஆதரவு, பொதுவாக பாஜகவுக்கு கிடைத்துவரும் கூடுதல் ஆதரவு இவற்றின் அடிப்படையில் கணிசமான அளவுக்கு வெற்றியைப் பெற முடியும் என பாஜக கருதுகின்றது.

எஸ்என்டிபி எனப்படும் ஜாதீய அமைப்பும் பாஜகவுடன் இணைந்துள்ளதால், கணிசமான வாக்குகளைப் பெற முடியும் என பாஜக கருதுகின்றது.

முதலமைச்சர் உம்மன் சாண்டியின் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மீது மக்களுக்கு நிறைய அதிருப்திகள் இருப்பதால், அவர்கள் மீண்டும் கம்யூனிஸ்ட் கூட்டணியைக் கொண்டுவரலாம் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

இழுபறி நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்றே கேரளா மாநிலத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்