Home Featured இந்தியா மறைக்கப்பட்ட சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு ரூபாய்க்கு விற்கத் தயார் – ப.சிதம்பரம்!

மறைக்கப்பட்ட சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு ரூபாய்க்கு விற்கத் தயார் – ப.சிதம்பரம்!

551
0
SHARE
Ad

p-chidambaram_81புதுடெல்லி – கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கை அமலாக்க பிரிவும், வருமான வரித்துறையும் விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சுவிட்சர்லாந்து உட்பட 14 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆங்கில பத்திரிகையான ‘தி பயோனீர்’ செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில், இது குறித்து ப.சிதம்பரம் கூறும்போது, ”கடந்த சில நாட்களுக்கு முன் எனது மகன் கார்த்தி சிதம்பரம் மீது பல பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது ஒரு திட்டமிட்டு வெளியிடப்பட்ட செய்தி என்பதை அனைவரும் அறிவர்.

#TamilSchoolmychoice

கார்த்தி சிதம்பரம் குடும்பச் சொத்துகளை மேலாண்மை செய்து வருவதோடு பல முறையான வணிக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக வருமான வரியையும் செலுத்தி வருகிறார்.

ஆண்டுதோறும் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்து வருகிறார். அவரது அனைத்து சொத்துக்கள், மூதலீடுகள் குறித்த விவரங்கள் அனைத்தும் வருமான வரி தாக்கலின்போது இணைக்கப்படுகின்றன.

கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இல்லை. வருமான வரித்துறை மற்றும் பிற அரசு சட்ட திட்டங்களுக்கு உள்பட அனைத்து வணிகங்களையும் கார்த்தி மேற்கொண்டு வருகிறார். பல சொத்து விவரங்களை கார்த்தி மறைத்துவிட்டார் என கூறுவது மிகவும் தவறானது.

கார்த்தியிடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அப்படி ஏதும் இருந்தால் அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு தயாராக இருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் திட்டமிட்டவை. என் மகன் என்பதற்காகவே கார்த்தி பழி வாங்கப்படுகிறார். உண்மையில் என்னை குறிவைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த செய்தி வெளியான நேரமும், இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் நோக்கத்தையும் என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. இதை வெளியிட்டவர்கள் மீது என்னால் பரிதாபம் மட்டுமே கொள்ள முடிகிறது. இறுதியில் சத்தியமே வெல்லும்” என்று தெரிவித்து உள்ளார்.