Home Featured நாடு செந்தமிழ்ச் செல்விக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை – பிகேஆர் தகவல்!

செந்தமிழ்ச் செல்விக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை – பிகேஆர் தகவல்!

563
0
SHARE
Ad

sivarasa-dec14கோலாலம்பூர் – மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக, அவரது மனைவி செந்தமிழ்ச் செல்வியிடம், பிகேஆர் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை என அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தெரிவித்துள்ளார்.

“கடந்த நவம்பர் மாதம் செந்தமிழ்ச் செல்வியைச் சந்தித்த பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன், அவரின் பிள்ளைகள் கல்விப் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்தார்.”

“பிள்ளைகளை தனியார் கல்லூரிகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படிக்க வைப்பதற்குத் தேவையான கணிசமான தொகை எவ்வளவு என்பதை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது”

#TamilSchoolmychoice

“அந்த சமயத்தில் கூட எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. வெளிநாட்டுப் பத்திரிக்கைகளிடம் பேட்டி கொடுங்கள் அதற்குப் பதிலாக இதைச் செய்கிறோம் என்று கோரிக்கை வைக்கவில்லை”

“செல்வி ஏன் திடீரென இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என்ற காரணத்திற்குள் நுழைய நான் விரும்பவில்லை”

“அந்த செய்தியாளர் சந்திப்பை பார்த்த அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கும். அந்த அறிக்கையை யாரோ ஒருவர் எழுதி அதை அவரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்லியிருக்கிறார்கள்” என்று சிவராசா கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த மாதம் வரையில் செல்விக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள சிவராசா, மனிதநேய அடிப்படையில் சிலாங்கூர் அரசாங்கமும் அவருக்கு சில நிதியுதவிகளைச் செய்து வருவதாகவும் சிவராசா தெரிவித்துள்ளார்.

bala widow pcநேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தமிழ்ச் செல்வி, தனது பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக பிகேஆரில் சில தரப்பினர் வாக்குறுதி அளித்துவிட்டு, அதை நிறைவேற்றவில்லை என்றும், தனது கணவரைக் கொன்றது பிரதமரின் மனைவி ரோஸ்மா தான் என தான் சாட்டிய குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.