Home Featured கலையுலகம் பிரபுதேவாவுடன் நடிக்கும் தமன்னா!

பிரபுதேவாவுடன் நடிக்கும் தமன்னா!

623
0
SHARE
Ad

Prabhudeva--tamannaசென்னை – பிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர் தமன்னாவுடன் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

பேய் படமாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

‘காந்தா’ என பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர். இப்படத்தில் பிரபுதேவா- தமன்னாவுடன் ஆர்.ஜே.பாலாஜி, சோனு சூட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.