Home Featured இந்தியா இந்தியாவில் முதல்முறையாக 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இரயில் அறிமுகம்!

இந்தியாவில் முதல்முறையாக 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இரயில் அறிமுகம்!

555
0
SHARE
Ad

Gatimaan Expressஆக்ரா – இந்திய இரயில்வே வரலாற்றில் புதிய உச்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும்  ‘கதிமான் எக்ஸ்பிரஸ்’ அதிவேக இரயில் நாளை 5-ஆம் தேதி முதல் பயணத்தை துவங்க உள்ளது. ஆக்ரா முதல் டெல்லி வரை இயக்கப்படும் இந்த ரெயில் 184 கி.மீ தூரத்தை 105-110 நிமிடங்களில்  கடந்துவிடும்.

12 குளிர்சாதனப் பெட்டிகள், ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளை வரவேற்க ‘ஈரயில் பணிப்பெண்கள்’, இலவச வை-ஃபை இணையத்தளம், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல புதிய வசதிகளுடன் இந்த இரயில் அறிமுகமாகிறது.

நாளை இந்த ரெயிலை மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகப்படுத்தி வைப்பார் என ரெயில்வே துறை சார்பாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.