Home Featured நாடு ஏப்ரல் 5-ம் தேதியை ‘நிஷா ஆயுப் தினமாக’ அறிவித்தது கலிபோர்னியாவின் சாண்டிகோ!

ஏப்ரல் 5-ம் தேதியை ‘நிஷா ஆயுப் தினமாக’ அறிவித்தது கலிபோர்னியாவின் சாண்டிகோ!

510
0
SHARE
Ad

US-SECRETARY-OF-STATE-JOHN-KERRY-HOLDS-CEREMONY-AND-FORUM-FOR-IN-164511கோலாலம்பூர் – மலேசிய திருங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவரான நிஷா ஆயுப்பின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கலிபோர்னியாவின் சாண்டிகோ நகரில், ஏப்ரல் 5- ம் தேதியை, ‘நிஷா ஆயுப் தினம்’ ஆக பிரகடனப்படுத்தியுள்ளார் சாண்டிகோ மேயர் கெவின் எல் பால்கானர்.

கடந்த வாரம் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற விருது விழாவில், 2016-ம் ஆண்டிற்கான அனைத்துலக ‘வீரமங்கை’ விருது நிஷா ஆயுப்புக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த அனைத்துலக ‘வீரமங்கை’ விருதைப் பெறும் முதல் திருநங்கைப் பெண் என்ற பெருமையையும் நிஷா ஆயுப் பெற்றார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அங்கீகாரம் குறித்து பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ள நி‌ஷா, தன்னால் இதை நம்ப முடியவில்லை என்றும், ஒரு கனவு போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜோஷ் சாரியா சிவில் ரைட்ஸ் விருதையும் தனக்கு சாண்டிகோ வழங்கியிருப்பதாகவும் நிஷா குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஏப்ரல் 5-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் நிஷா, அவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்த கௌரவத்தை வழங்கியுள்ளது சாண்டிகோ.