Home வணிகம்/தொழில் நுட்பம் 6வது ஐ.பி.எல் விளம்பர வருமானம் ரூ.950 கோடியாக உயர்வு

6வது ஐ.பி.எல் விளம்பர வருமானம் ரூ.950 கோடியாக உயர்வு

496
0
SHARE
Ad

IPL-Logo-Slider15 மார்ச் – ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) டி20 போட்டிக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில மணி நேரங்களில் முடிந்துவிடும் 20 ஓவர்களைக் கொண்ட இந்த கிரிக்கெட் ஆட்ட முறைக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இதனால் அதற்கு வருமானம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ஐ.பி.எல். போட்டிக்கான ஸ்பான்சர் (விளம்பரதாரர்)கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருமானமும் அதிகரித்து வருகிறது.

#TamilSchoolmychoice

முதலாவது ஐ.பி.எல் போட்டி நடந்த போது அதன் விளம்பர வருவாய் ரூ.250 கோடியாக இருந்தது. இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போட்டிக்கான விளம்பர வருவாய் ரூ.950 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரதாரர்கள் அதிகரிப்பு, விளம்பர கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வருவாய் அதிகரித்து உள்ளது. 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை விளம்பர கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பெப்சிகோ, வோடாபோன் ஆகிய மெயின் ஸ்பான்சர்கள் மூலம் தலா ரூ.40 முதல் ரூ.60 கோடியும், இணை ஸ்பான்சர்களான டாடா போடான், கார்போன், கோத்ரெஜ், சாம்சங், பேனசோனிக், உஷா அப்ளையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் ரூ.25 முதல் 30 கோடி வரை விளம்பர வருவாய் கிடைக்கிறது.

செட்மேக்ஸ், சோனி ஆகிய சேனல்களுக்கு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6வது ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் ரூ.950 கோடி விளம்பர வருவாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் ரூ.750 கோடி விளம்பர வருவாய் கிடைத்தது. தற்போது அதை விட 27 சதவிகிதம் வருவாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

6வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 3ம் திகதி தொடங்குகிறது.

அதற்குள் மேலும் பல விளம்பரதாரர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விளம்பர வருவாய் மேலும் அதிகரிக்கும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.