Home வணிகம்/தொழில் நுட்பம் சாம்சுங் நிறுவனத்தின் “கெலக்சி S4” கைத்தொலைபேசி அறிமுகம்

சாம்சுங் நிறுவனத்தின் “கெலக்சி S4” கைத்தொலைபேசி அறிமுகம்

619
0
SHARE
Ad

மார்ச் 16 –  கைத்தொலைபேசி தயாரிப்புத் துறையில் உலகையே கலக்கி வருவதோடு, அமெரிக்காவின் நிறுவனங்களுக்குக்கூட சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தென் கொரியாவின் சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பாக “கெலக்சி S4” என்ற கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வேறு அதிநவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் இந்த கைத்தொலைபேசி 5 அங்குல முகப்புத் திரையையும் (screen size) 170 கிராம் எடை கொண்ட மின்கலத்தையும் (பேட்டரி) கொண்டிருக்கும். அதன் வடிவம் மிகவும் மெலிதாக 7.9 மில்லி மீட்டர் அளவில் இருக்கும்.

Samsung-Galaxy-4---Slider

#TamilSchoolmychoice

HD எனப்படும் உயர்தர தெளிவைக் கொண்ட திரையை உலகிலேயே முதன் முறையாகக் கொண்டு வெளிவருவதோடு, 13 மெகா பிக்சல் திறன் கொண்ட புகைப்படக் கருவியையும் (கேமரா) இந்த கெலக்சி S4 கைத்தொலைபேசி கொண்டிருக்கும்.

மெலிதாக இருந்தாலும், உறுதியான அமைப்புக்களோடும் வெளிவரும் இந்த கைத்தொலைபேசி கறுப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மற்ற வண்ணங்களில் வெளிவரும்.

இந்த புதிய கைத்தொலைபேசியைப் பற்றி குறிப்பிட்டுள்ள சம்சுங் நிறுவனப் பேச்சாளர், இதன் அதிநவீன அம்சங்கள் அனைத்தும் உலகெங்கிலும் உள்ள பயனீட்டாளர்களின் தேவைகள் மற்றும் உள்ளுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.