Home Featured நாடு பெர்சே 4 பேரணிக்கான அறிவிப்பை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? – காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!

பெர்சே 4 பேரணிக்கான அறிவிப்பை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? – காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!

645
0
SHARE
Ad

bersihகோலாலம்பூர் – கடந்த ஆகஸ்ட் மாதம், பெர்சே 4 பேரணி நடத்துவதற்காக அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா அளித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று கண்டித்துள்ளது.

அமைதிப் பேரணி சட்டத்தின் படி (பிஏஏ), டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவிருந்த பேரணிக்காக, டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சைனோல் சாமாவிடம், பெர்சே தலைவர் மரியா அறிக்கை அளிக்க முயற்சி செய்துள்ளது எதிர்தரப்பினரின் கூடுதல் சத்திய வாக்குமூலத்தின் (additional affidavit) மூலம் தெளிவாகியிருப்பதாக நீதிபதி மொகமட் ஷாரிப் அபு சமா தெரிவித்துள்ளார்.

“காவல்துறை ஏன் அவர்களின் அறிக்கையை (முன்கூட்டிய அறிவிப்பு) ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் கேள்வி. அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” என்று மொகமட் ஷாரிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

10 நாட்களுக்குள்ளாகவே (பேரணி குறித்து) காவல்துறைக்குத் தெரிவிக்க மரியா முயற்சி செய்துள்ளதால், பிஏஏ சட்டம் பிரிவு 9(1)-ன் கீழ் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும், பிஏஏ சட்டத்தின் கீழ் தன் மீதான குற்றச்சாட்டை நீக்கும் படி மரியா அளித்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.

காரணம், என்யு செண்ட்ரல் வளாகத்திற்கு வெளியே கூடிய பேரணி குறித்து காவல்துறைக்கு அவர் முன் அறிவிப்பு செய்யவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.