Home Featured நாடு விமர்சனத்திற்குள்ளான கோலாலம்பூரின் புதிய சின்னம்: “இன்னும் மாற்றங்கள் செய்வோம்” என்கிறார் மேயர்!

விமர்சனத்திற்குள்ளான கோலாலம்பூரின் புதிய சின்னம்: “இன்னும் மாற்றங்கள் செய்வோம்” என்கிறார் மேயர்!

772
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கோலாலம்பூரின் புதிய சின்னம் என அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வடிவம் மற்றும் வாசகம், இணையவாசிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், “அதை இன்னும் மெருகேற்றுவோம்” என மேயர் மொகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

பழுப்பு நிறத்தில் “KUALA LUMPUR” என்று எழுதப்பட்ட வாசகத்திற்கு கீழே அதன் நிழல் விழுவது போன்றும், அதற்குக் கீழே ” ‘exciting, surprising, enticing’ மற்றும் ‘A City of Contrasts & Diversity’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது (படம்).

Kuala lumpurஇந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் எழுந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று கருத்துத் தெரிவித்துள்ள மேயர் மொகமட் அமின், இது சின்னம் வடிவமைப்பு யோசனை தனி ஒருவருடையது அல்ல. கோலாலம்பூர் சுற்றுலா வாரியத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களிடமும் கலந்தாலோசித்த பிறகே அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இது ஒரு தொடக்கம் தான். இந்தச் சின்னத்தை விளம்பரப்படுத்த இன்னும் எங்களிடம் திட்டம் இருக்கின்றது. இந்தச் சின்னம் நிலைபெறுவதற்கு இன்னும் ஆண்டுகள் ஆகலாம்”

“நாங்கள் மேம்பாடுத்த தயாராக இருக்கின்றோம். அதன் வண்ணத்தை மாற்றலாம். யாராவது திட்டம் வைத்திருந்தால் என்னிடம் தெரியப்படுத்துங்கள். அதை நான் வாரியத்திடம் சமர்ப்பிக்கிறேன்” என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்று செய்தியாளர்கள் சந்திப்பில் மொகமட் அமின் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி எங்கேயோ போய்விட்ட இன்றைய காலத்தில், உலக அளவில் இருந்து மலேசியாவிற்கு வரும் சுற்றுப் பயணிகளைக் கவர அறிமுகம் செய்யும் மலேசியத் தலைநகரின் சின்னம் இவ்வளவு எளிமையாகவா இருப்பது? சின்னம் அறிமுகம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வேர்ட் டாக்குமெண்ட்டில் (Word Document) அவசர அவசரமாக வரைந்தது போல் அல்லவா தெரிகின்றது? என்று இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.