Home Featured இந்தியா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!

886
0
SHARE
Ad

indiaபுதுடெல்லி – இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது.

இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை கோடை வெயில் மற்றும் அனல் காற்றின் கொடுமை தாங்காமல் 4,200 பேர் உயிழந்துள்ளதாக இந்திய மக்கள்நலக் காப்பகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கோடை வெப்பத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

வெப்பத்தை தாங்க முடியாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரு தினங்களில் மட்டும் 96 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் கோடை வெயில் துவங்கி ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் வாட்டி வதைக்கிறது.

வெயிலின் தாக்கத்திற்கு ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் உயிர் பலி ஏற்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை கோடை காலத்தில் வெயிலின் வீரியத்திற்கு 4,200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.