Home Featured தமிழ் நாடு இரண்டு ‘அம்மாக்களும்’ வெற்றி – தமிழகத்தில் ‘ஜெ’ – மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி!

இரண்டு ‘அம்மாக்களும்’ வெற்றி – தமிழகத்தில் ‘ஜெ’ – மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி!

672
0
SHARE
Ad

jayalalitha-mamtha-1இந்தியாவில் நடைபெற்ற நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வரும் நிலையில், இரண்டு மாநிலங்களில் மீண்டும் பெண் முதல்வர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

தமிழ்நாட்டில் அம்மா என்றால் ஜெயலலிதாதான். அவரது தலைமையிலான கூட்டணி 127 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டணி இதுவரை 219 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றது.

இந்த இரண்டு மாநிலங்களுடன், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களையும் உள்ளடக்கிய தேர்தல் முடிவுகளின் இறுதிக் கட்ட நிலவரங்கள்:

#TamilSchoolmychoice

கேரளா

  • கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 95 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரிக் கூட்டணி முன்னணி வகிக்கிறது.
  • காங்கிரஸ் கூட்டணி 42 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றது.
  • பாஜக 1 தொகுதியில் முன்னணி வகிக்கின்றது.
  • பினராய் விஜயன் கேரளாவின் அடுத்த முதல்வராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பின்தங்குகின்றார்.

மேற்கு வங்காளம்

  • மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள இடங்கள் 294 சட்டமன்றத் தொகுதிகளாகும்.
  • மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இதுவரை 218 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றது.
  • காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது
  • கம்யூனிஸ்ட் கட்சிகள் 31 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றன.

அசாம்

  • முஸ்லீம் வாக்குகளில் பெரும்பான்மையானவை இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு சென்றுள்ளது.
  • அசாமின் அடுத்த முதல்வராக சர்பானந்தா சொனோவால் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இதுவரையில் இங்குள்ள 126 தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருக்கின்றது.
  • 31 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றிருக்கின்றது. இந்த தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் இங்கு ஆட்சி செய்து வந்தது.
  • மற்ற கட்சிகள் 20 தொகுதிகளைப் பெற்றிருக்கின்றன.

புதுச்சேரி 

  • நடப்பு முதல்வர் ரெங்கசாமி இந்திரா நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • ரெங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.
  • திமுக-காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.
  •  அதிமுக ஒரே ஒரு தொகுதியில்தான் முன்னணி வகிக்கின்றது.