Home Featured கலையுலகம் லாஸ்யா கலாலயத்தின் ‘லஹரி’ – நாட்டிய நாடகம் (படத்தொகுப்பு)

லாஸ்யா கலாலயத்தின் ‘லஹரி’ – நாட்டிய நாடகம் (படத்தொகுப்பு)

887
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் மிகச் சிறந்த இசை மற்றும் நாட்டியப் பள்ளிகளுள் ஒன்றான லாஸ்யா கலாலயம் ஏற்பாட்டில், ‘லஹரி – இறைவழிப் பயணம்’ என்ற நாட்டிய நாடகம் கடந்த மே 28-ம் தேதி, இரவு 7 மணியளவில், பிரிக்பீல்ட்ஸ் நுண் கலை ஆலயத்தில் (Temple of Fine Arts) மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

ஸ்ரீஆதிசங்கரரின் மூலப் படிவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நாட்டிய நாடகத்திற்கு வாத்திய ரத்னாகரா சசிதரன் நாயர் இசையமைத்திருந்தார்.

‘மதுரநாட்டிய மாமணி’ குருவாயூர் உஷா துரை நாட்டிய வடிவமைப்பு மேற்கொள்ள, லாஸ்யா கலாலயத்தின் உதவித் தலைவர் அப்துல்லா அப்துல் ஹமிட், குணரத்னம் வேலாயுதம், குமரன் பொன்னுசாமி, கௌரி பூபாலன், பெட்ரிசியா அருள்ராஜ், நிரோஷினி ரெங்கநாத், ஜெய்சங்கரி, ஐஸ்வர்யா கணேசன், ஷாமினி சந்திரன், சங்கரி அட்ரேன் பிரான்சிஸ், கிருத்திகா இராமச்சந்திரன் ஆகியோர் அபிநயம் வழங்கினர்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சியில் இசை நாட்டிய உலகைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் பங்கேற்று தங்களது பேராதரவையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.

அதன் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்:-

Lahari 1

Lahari 2

Lahari 5

Lahari 9

Lahari 10

Lahari 11

Lahari 7

Lahari 8

lahari 3

படங்கள்: நன்றி (LakshmanR)