Home Featured கலையுலகம் அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளாரா?

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளாரா?

491
0
SHARE
Ad

rajinikanth-old-age-wallpaper-586x529சென்னை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றிருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

அதோடு, ‘2.0’ படத்திற்காக அமெரிக்காவில் சில ஒப்பனை பரிசோதனைகளும் செய்து வருவதாகத் தகவல்கள் கூறின.

இந்நிலையில், தற்போது புதிதாகப் பரவி வரும் செய்தி என்னவென்றால், ரஜினி அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றதாக இந்தியா கிளிட்ஸ் உள்ளிட்ட தகவல் ஊடகங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் இசைவெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதியும், வரும் ஜூலை மாதம் படம் வெளியீடும் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய செய்தி ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.