Home Featured இந்தியா உத்தரப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் மூலம் – பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்!

உத்தரப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தல் மூலம் – பிரியங்கா காந்தி அரசியல் பிரவேசம்!

988
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியா முழுமையிலும் மிகவும் மோசமான நிலையில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைச் சரிக்கட்ட, இறுதிக் கட்ட ஆயுதமாக, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச (உ.பி) சட்டமன்றத் தேர்தல்களில் பிரியங்கா காந்தியை களமிறக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

priyanka-story_650_042714020049சோனியா காந்தி – ராகுல் காந்தி தலைமையில் இயங்கும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதலப் பாதாளத்தில் பாய்ந்துள்ள நிலையில், அதனைத் தூக்கி நிறுத்த அந்தக் கட்சிக்கு இருக்கும் ஒரு சாதக அம்சம் இப்போதைக்கு பிரியங்காதான்!

உத்தரப் பிரதேசத் தேர்தலில் அவரையோ – அப்படி அவர் அரசியலுக்கு வராவிட்டால் ராகுல் காந்தியையோ – முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி  உ.பி. தேர்தலைச் சந்தித்தால் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் என்றும், உத்தரப் பிரதேசத்தை வெல்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பிரியங்காவுக்கு சோதனை அவரது கணவர் ராபர்ட் வதேராதான்!

priyanka-indira

மறைந்த இந்திரா காந்தியின் பேத்தி – நேருவின் வாரிசு – ராஜிவ் காந்தியின் மகள் என பல பிரபலங்களைப் பின்னணியாகக் கொண்டவர் பிரியங்கா.

பாட்டியைப் போலவே, நடை-உடை-பாவனை-சிகையலங்காரம், என அப்படியே இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் பிரியங்கா காந்தி உத்தரசப் பிரதேச முதல்வர் என அறிவிக்கப்பட்டால், அதன் மூலம், உத்தரப் பிரதேச அரசியல் சூடு பிடிக்கும் என்பதோடு, ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படக் கூடும்.

பெருகி வரும் பாஜகவின் செல்வாக்கு – மோடியின் உச்சகட்ட பிரபலம் என இப்போது இருக்கும் அரசியல் நிலவரத்தை மாற்றிக் காட்ட வேண்டுமானால் காங்கிரசுக்கு இருக்கும் ஒரே அஸ்திரம் இப்போதைக்கு, பிரியங்காதான்!

ஆனால், அவருக்கு இருக்கும் ஒரே தலைவலி அவரது கணவர் ராபர்ட் வதேரா (படம்)!

robert-vadraவதேராவின் ஆடம்பர வாழ்க்கை முறை, அவர் மீது அடுக்கடுக்காக சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் – இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தால் – இவற்றை பாஜக தீவிரமாகக் கையிலெடுத்தால், அதன் பின்னர் பிரியங்காவின் அரசியல் செல்வாக்கு உயருமா –

அல்லது மேலும் மோசமடையுமா என்பதுதான் இப்போதைக்கு இந்திய அரசியலில் எழுந்துள்ள கேள்வி!

எது எப்படியிருந்தாலும், உத்தரப் பிரதேசத் தேர்தல்கள் முடிவடையும் வரையில் இந்திய அரசியல் களத்தில், அனைவராலும் இனி அடுத்த ஓராண்டுக்கு தவறாமல் உச்சரிக்கப்படவிருக்கும் பெயர் – பிரியங்கா காந்திதான்!

-இரா.முத்தரசன்