Home நாடு பி.என்.பி பணியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை – பிரதமர் நஜிப்

பி.என்.பி பணியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை – பிரதமர் நஜிப்

571
0
SHARE
Ad

nகோலாலம்பூர், மார்ச் 18 – பி.என்.பி (Permodalan Nasional Berhad) குழுமத்தில் பணிபுரியும் 200,000 நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான ஊக்கத் தொகையில் மேலும் ஒரு 1 மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்கும் தகவலை பிரதமர் நஜிப் நெற்று வெளியிட்டார்.

நேற்றிரவு செர்டாங்கில், பி.என்.பி யின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசிய நஜிப், ” பி.என்.பி குழுமத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும்  2012 ஆம் ஆண்டுக்கான ஊக்கத் தொகையில்  மேலும் 1 மாத சம்பளம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை பணியாளர்களின் கடின உழைப்பிற்காகவும், பி.என்.பியின் 35 ஆண்டுகால வெற்றிகளை மேலும் தொடர உற்சாகப்படுத்தும் விதமாகவும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

“பி.என்.பி குழுமத்தைச் சேர்ந்த மற்ற நிறுவனங்களும் அதன் பணியாளர்களுக்கு இதே போல் ஊக்கத்தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும்  இந்த வருடம் அமனா சகாம் 1 மலேசியாவின் மூலம்  பி.என்.பி  ஊழியர்களின் 23 வயதுக்குட்பட்ட 2,434 பிள்ளைகளுக்கு தலா 1000 ரிங்கிட் வீதம் வழங்கப்படவிருக்கிறது”என்றும் நஜிப் மேலும்  தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப் உடன் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர்,  பி.என்.பி   தலைவர் அகமட் சார்ஜி அப்துல் ஹமிட்டும்,  பி.என்.பி தலைமை நிர்வாக அதிகாரி ஹமாத் பியா சே ஒஸ்மான் ஆகியோரும் அவ்விருந்தில் கலந்து கொண்டனர்.