Home இந்தியா இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா

இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா

463
0
SHARE
Ad

புதுடெல்லி, மார்ச் 18- தற்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 21-ம் தேதி நடைபெறும்போது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை வலுவானதாக்கி இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Karunanithi-Slider---3இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் ஆளும் ஐ.மு. கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி (படம்) கூறியிருந்தார். இதனையடுத்து அவருடன் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் இன்று ஆலோசனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

இத்தகைய சூழ்நிலையில், மார்ச் 23-ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-இலங்கை நாடுகளின் பாதுகாப்புத்துறை செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை.