Home வாழ் நலம் உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்- ஆராய்ச்சியில் தகவல்

உடல் பருமனாக உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் வாழ்கிறார்கள்- ஆராய்ச்சியில் தகவல்

620
0
SHARE
Ad

heart

கோலாலம்பூர், மார்ச்.19- இருதய நோய் பாதிக்கப்பட்டவர்களில் உடல் பருமனாக உள்ளவர்கள் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து 4400-க்கும் மேற்பட்ட உடல் பருமன் அதிகமாக உள்ள இதய நோயாளிகளிடம் ஆராய்ச்சி செய்தபின் இக்கருத்தை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

சாதாரண உடல்வாகு கொண்டவர்களை விட பருமனாய் உள்ள இதய நோயாளிகள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள். இதற்கு அந்த நோயாளிகள் தீவிர மருத்துவ கவனிப்பில் இருப்பதுவும் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையின்படி வாழ்க்கை மற்றும் உணவு முறைகளைக் கடைப்பிடிப்பதும் இவர்களின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

பிரிட்டனின் ஹார்ட் ஃபவுண்டேஷன் அவர்களிடம் ஆலோசனை பெற வந்த நோயாளிகளை ஆராய்ந்தபோது மற்றவர்களைவிட உடல் பருமன் கொண்டோர் கூடுதலாக ஏழு வருடங்கள் உயிர் வாழ்கின்றனர் என்பதை கண்டறிந்தனர். மேலும் இதய நோயாளிகளில் 31 சதவிகிதத்தினர் தற்காப்புக்காகவும் மருந்துகள் உட்கொள்ளுகின்றனர்.

இளவயதினர் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு (கொலஸ்டிரால்) போன்ற பிரச்சினைகளுடன் இதய நோய்க்கான வாய்ப்புகளுடன் இருந்தாலும், புகைப் பழக்கம் இல்லாதிருந்தால் அவர்களின் வாழ்நாளும் நீடிக்கின்றதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.