Home Featured கலையுலகம் விருது விழா விவகாரம்: அமைச்சின் முடிவை ஏற்பதாக ஃபினாஸ் அறிவிப்பு!

விருது விழா விவகாரம்: அமைச்சின் முடிவை ஏற்பதாக ஃபினாஸ் அறிவிப்பு!

684
0
SHARE
Ad

finasகோலாலம்பூர் – 28-வது மலேசியத் திரைப்பட விருது விழாவில், சிறந்த படத்திற்கான பிரிவில், மலேசியாவின் அனைத்து மொழிப்படங்களும் போட்டியிடலாம் என்ற தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் முடிவை ஏற்பதாக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (ஃபினாஸ்) அறிவித்துள்ளது.

புதிதாக எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு குறித்து வாரிய உறுப்பினர்களுடன் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்தாலோசிப்பதாகவும், அடுத்தக் கட்ட மாற்றங்கள் குறித்து அதில் முடிவெடுக்கப்படும் என்றும் ஃபினாஸ் இயக்குநர் டத்தோ கமீல் ஒத்மான் தெரிவித்துள்ளார்.