Home Featured நாடு செப்-1 முதல் பத்துமலை ஆலய வளாகத்தில் புகைபிடிக்கத் தடை!

செப்-1 முதல் பத்துமலை ஆலய வளாகத்தில் புகைபிடிக்கத் தடை!

654
0
SHARE
Ad

BatuCave1கோலாலம்பூர் – வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், பத்துமலை ஆலய வளாகத்தில் புகைப்பிடிப்பதற்கும், அங்குள்ள கடைகளில் அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தமிழ் நாளிதழ்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“வரும் 1-09-2016, வியாழக்கிழமை முதல் பத்துமலைத் திருத்தல வளாகத்தில் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுப் பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க, பத்துமலைத் திருத்தலத்தின் புனிதத்தையும், பெருமையையும் பாதுகாக்கும் வகையில், பத்துமலைக்கு வருகை தரும் பொதுமக்கள் புகை பிடிப்பதை தவிர்க்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொள்கிறது. மேலும், பத்துமலை வளாகத்தில் உள்ள கடைகளில் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“தேவஸ்தானத்தின் இந்த முடிவிற்கு பொதுமக்களும், பக்தர்களும், சுற்றுப்பயணிகளும் பத்துமலை வளாகத்தில் புகை பிடிப்பதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.