எம்எச்17 விசாரணை: ரஷிய மொழி பேசும் இருவரின் பெயரை வெளியிட்டது டச்சு!

    738
    0
    SHARE
    Ad

    mh17தி ஹாகுவே – எம்எச்17 விமானப் பேரிடர் தொடர்பான நெடுநாள் விசாரணைக்குப் பிறகு, முதல் முறையாக நேற்று புதன்கிழமை, டச்சு அரசாங்கத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு ரஷிய மொழி பேசும் ஆடவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

    அவர்கள் இருவரைப் பற்றிய மேல் விவரங்களை அறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும், டச்சு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில், டச்சு காவல்துறை இணையதளத்தில், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஆண்ட்ரி இவானோவிச் மற்றும் நிக்கோலே பியோடோரோவிச் என அவர்கள் இருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    #TamilSchoolmychoice

    கடந்த 2014-ம் ஆண்டு, ஜூலை 17-ம் தேதி, 283 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் ஆம்ஸ்டெர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17, கிழக்கு உக்ரைன் அருகே ஏவுகணை மூலமாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

    இந்தப் பேரிடரில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர். அவர்களில் 44 பேர் மலேசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.