Home வாழ் நலம் தர்ப்பூசணி- சத்துப்பட்டியல்

தர்ப்பூசணி- சத்துப்பட்டியல்

1011
0
SHARE
Ad

water-melonகோலாலம்பூர், மார்ச்.20- கோடையின் தாக்கத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதங்களில் ஒன்று தர்ப்பூசணி.

இது தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. வெப்ப மண்டல பகுதிகளில் அதிக அளவில் விளையும். நிறம் மற்றும் வடிவத்தில் வேறுபட்ட வகைகளில் தர்ப்பூசணி விளைகிறது.

சிவப்பு சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி பிரபலம். ஆனால் ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் சதைப்பகுதி கொண்ட தர்ப்பூசணி வகையும் உள்ளன. தர்ப்பூசணியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

#TamilSchoolmychoice

தர்ப்பூசணி அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. அத்துடன் உடல் இயக்கத்திற்கு தேவையான மின்னாற்றலை வழங்கும் எலக்ட்ரோலைட்டுகளும் அதிக அளவில் உள்ளன.

குறைந்த ஆற்றல் வழங்கும் கனி தர்ப்பூசணி. 100 கிராம் தர்ப்பூசணி 30 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. கொழுப்புச் சத்து மிகக் குறைந்த அளவிலும், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் இதர சத்துக்கள் மிகுதியாகவும் கொண்டுள்ளது தர்ப்பூசணி.

வேறு எதிலும் இல்லாத அளவுக்கு மிகுதியாக ‘வைட்டமின் ஏ’, சத்து தர்ப்பூசணியில் உள்ளது. 100 கிராம் தர்ப்பூசணியில் 569 மில்லிகிராம் ‘வைட்டமின் ஏ’ கிடைக்கிறது.

இது கண் பார்வைத் திறனுக்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் மிகவும் அத்தியாவசியமாகும். சருமத்திற்கு பொலிவு தரும். நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதிலும் ‘வைட்டமின் ஏ’ பங்கெடுக்கிறது.

இந்த பழத்தில் லைகோபின், பீட்டா கரோட்டின், லுடின், ஸிசாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இவை தொண்டை, இரைப்பை, மார்பு, நுரையீரல், குடல் போன்ற பாகங்களைத் தாக்கும் புற்றுநோய்களில் இருந்து உடலைக் காக்கும்.

புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் லைக்கோபின் நிறமி தர்ப்பூசணியில் மிகுதியாக உள்ளது. பொட்டாசியம் தாது தர்ப்பூசணியில் நிறைந்துள்ளது. இது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற் றையும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் முடக்குவாதம், இதய பாதிப்புகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கெடுக்கிறது.

வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1, வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும், மாங்கனீசு தாதுவும் சிறந்த அளவில் இந்தப் பழத்திலிருந்து கிடைக்கிறது. வைட்டமின் சி சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகும். உடலை நோய்த்தொற்றுக்கு எதிராக செயல்படுத்துவதோடு, தீமை பயக்கும் பிரீ-ரேடிக்கல்களை துப்புரவு செய்கிறது.

தர்ப்பூசணியை குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து பின்னர் தோல் பகுதியை வெட்டி அகற்றிவிட்டு துண்டுகளாக்கி சாப்பிட வேண்டும். தோல் பகுதியுடன் துண்டாக்கி சாப்பிட்டால் கிருமித் தொற்றுகளால் நோய்கள் ஏற்படலாம்.

தர்ப்பூசணியின் வெண்மை நிற தோல் பகுதியை தென் அமெரிக்க நாடுகளில் காய்கறிபோல சமைக்கப் பயன்படுத்துகிறார்கள்.