Home Featured இந்தியா உச்ச நீதிமன்றத்திடம் கர்நாடகம் பணிந்தது! காவிரி திறந்து விடப்படுகின்றது!

உச்ச நீதிமன்றத்திடம் கர்நாடகம் பணிந்தது! காவிரி திறந்து விடப்படுகின்றது!

935
0
SHARE
Ad

cauvery_water

சென்னை – இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குக்கூட அடிபணியாமல் எதிர்ப்பு நிலை காட்டி வந்த கர்நாடக அரசு இறுதியாக  பணிந்தது. நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 6,800 கன அடி காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் எனக் கடுமையாக எச்சரித்திருக்கும் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 1 முதல் 6-ஆம் தேதி வரை தினசரி 6,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்றும் அந்த உத்தரவுகளை நிறைவேற்றும் வரை கர்நாடக அரசின் எந்த ஒரு விண்ணப்பத்தையும் உச்ச நீதிமன்றம் செவிமெடுக்காது என்றும் கடுமையாக எச்சரித்ததைத் தொடர்ந்துதான் கர்நாடகம் காவிரி நீரைத் திறந்து விடும் முடிவை எடுத்தது.

#TamilSchoolmychoice

நேற்று கூடிய கர்நாடக சட்டமன்றம் ஏகமனதாக ஒப்புதல் அளித்ததன் பின்னரே காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள முடிவுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களிடையே பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

கருணாநிதி கண்டனம்

DMK karunanithi“மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?” என்பதைப் போல மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது. மேலும் மத்தியில் ஆட்சியில் இருப்போர் விரைவில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை மனதிலே கொண்டு, இந்தத் திடீர் முடிவினை, நடுநிலைமை தவறி, முழுக்க முழுக்க கர்நாடகாவின் குரலை எதிரொலிக்கும் ஊது குழலாக செயல்பட்டுள்ளது, மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்” என திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

“தமிழ்நாட்டில் பா.ஜ.க. எப்படியும் காலூன்ற முடியாத நிலையில், கர்நாடகத்திலாவது வரக் கூடிய தேர்தலில் இந்த முடிவின் மூலம் வெற்றி பெற்று விட முடியுமா என்று மனப்பால் குடித்துக் கொண்டு செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்திய நாட்டின் நீதி பரிபாலன முறைகளையே சிறுமைப்படுத்தும் வகையிலும், மொத்தத் தமிழ்மக்களை வஞ்சித்திடும் முறையிலும் செயல்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் முடிவையும், கர்நாடக அரசின் முடிவையும் தமிழகத்திலே உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க முன் வர வேண்டும் என்றும்; நெருக்கடியான இந்த நிலையிலாவது தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்றும் கலைஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.