Home Featured நாடு ‘வங்கதேசத்தினர் மலேசியக் குடிமகன்களாக மாறலாம்’ – நஸ்ரி உறுதி!

‘வங்கதேசத்தினர் மலேசியக் குடிமகன்களாக மாறலாம்’ – நஸ்ரி உறுதி!

568
0
SHARE
Ad

nazri_aziz__c221353_111127_970கோலாலம்பூர் – மலேசியாவிற்கும், வங்கதேசத்திற்கும் இடையிலான நெருக்கமான நட்புறவு காரணமாக, வங்க தேசத்தினரின் இரண்டாம் வீடாக மலேசியா மாறும் என சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற வங்கதேச உலகளாவிய மாநாட்டில் பேசிய நஸ்ரி, சுற்றுலா அமைச்சின் கீழ் வரும் மலேசியா எனது இரண்டாம் வீடு என்ற திட்டத்தை சுட்டிக் காட்டினார்.

“நான் உறுதியளிக்கிறேன், சுற்றுலா அமைச்சில், இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால், அது என்னிடமே நேரடியாக வரும்”

#TamilSchoolmychoice

“இன்ஷியாஅல்லா, நான் அதற்கு அனுமதியளிப்பேன்” என்று நஸ்ரி தெரிவித்தார்.

மேலும், இரண்டு நாட்டிற்கும் இடையில் முஸ்லிம் கலாச்சாரத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையுள்ளதை சுட்டிக் காட்டிய நஸ்ரி, நிறைய வங்க தேசத்தினர் மலேசியர்களாக ஆகும் வாய்ப்பும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இங்கே உங்களுக்கு நல்ல தூதர் இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இங்கே தங்கினால், அவரும் மலேசியராக ஆகலாம்” என்று மலேசியாவிற்கான வங்கதேச தூதர் மொகமட் ஷாஹிடுல் இஸ்லாமை சுட்டிக் காட்டி நஸ்ரி தெரிவித்தார்.

“நமக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் அனைவரும் பார்க்க ஒரே போல் தான் இருக்கிறோம். உங்களை விட கருப்பான மலாய்க்காரர்களைக் கூட நீங்கள் இங்கு காணலாம். கவலை வேண்டாம்” என்றும் நஸ்ரி தெரிவித்தார்.