Home 13வது பொதுத் தேர்தல் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின் 25 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

13வது பொதுத் தேர்தலுக்குப் பின் 25 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

893
0
SHARE
Ad

Feature-Parlimen-Buildingகோலாலம்பூர், ஜனவரி 15 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தல் முடிவடைந்து புதிய மலேசிய நாடாளுமன்றம் கூடும்போது, இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த பட்சம் 25 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாவது அந்த நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

காரணம், ம.இ.கா,  9 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்ற அதே வேளையில், எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியில் குறைந்தது பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிகின்றது.

மற்றொரு எதிர்க்கட்சியான பிகேஆர் கட்சியிலும் சுமார் 10 இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்ற இடங்களுக்கு நிறுத்தப்படுவார்கள் எனத் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் மற்றொரு அங்கத்துவ கட்சியான கெராக்கானின் சார்பில் தற்போதைய துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை நிறுத்தப்படுவார் என்பதும் உறுதியாகி விட்டது.

ம.இ.கா போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் அநேகமாக இந்திய எதிர்க்கட்சி வேட்பாளர்களே நிறுத்தப்படுவார்கள் என்பதால், அந்த தொகுதிகளின் வழி ஒரு இந்தியர் தோல்வியுற்றாலும் அவரை வெல்லும் போட்டி எதிர்க்கட்சி வேட்பாளரும் இந்திய வேட்பாளராகத்தான் இருப்பார்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பல வேட்பாளர்கள் ம.இ.கா போட்டியிடாத தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள். உதாரணமாக பிகேஆர் கட்சியின் சுரேந்திரன் போட்டியிடும் பாடாங் செராய் தொகுதி ம.இ.காவின் தொகுதி அல்ல. ஜசெகவின் சார்ல்ஸ் சாண்டியகோ போட்டியிடும் கிள்ளான் தொகுதியும் ம.இ.கா போட்டியிடும் தொகுதியல்ல.

இதை வைத்துப் பார்க்கும் போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த பட்சம் 25 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று மலேசிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.