Home Featured நாடு மொகிதின் விடுத்த அழைப்பை பாஸ் நிராகரித்தது!

மொகிதின் விடுத்த அழைப்பை பாஸ் நிராகரித்தது!

619
0
SHARE
Ad

muhyiddin-yassin1கோலாலம்பூர் – அடுத்தப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்கொள்ள ஜசெக மற்றும் அமனாவுடன் பாஸ் மீண்டும் இணைய வேண்டும் என பிபிபிஎம் (Parti Pribumi Bersatu Malaysia) கட்சி விடுத்த அழைப்பை பாஸ் உடனடியாக நிராகரித்துள்ளது.

சிலாங்கூர் பாஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற “மெகா செராமா ராயாட்” என்ற கூட்டத்தில், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான பிபிபிஎம் கட்சி விடுத்த இந்த அழைப்பை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மாட் நிராகரித்தார்.

ஜசெக, அமனாவுடன் இஸ்லாமியக் கட்சி இனி எந்த ஒரு உறவையும் வைத்துக் கொள்ளாது என்று துவான் இப்ராகிம் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice